அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 3,828 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை) 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு  1,295 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு  2,425 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 80 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

ஒக்டோபர் முதல் வாரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை