அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை – மஹிந்த தேசப்பிரிய.

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் இருப்பின், தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு அதனை மேற்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் எந்த தடையும் இல்லை. பாதுகாப்பு பணிகள் முறையாக நடந்து வருகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக அந்த செயற்பாடுகளை ஒருங்கிணைக்க முடியும்.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும்…” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்