அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி தபால் மா அதிபர் தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு மற்றும் விநியோக அட்டைகள் தொடர்பில் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க விளக்கமளித்தார்.

இதற்காக 8,000 ஊழியர்க​ளை பயன்படுத்த எதிர்பார்த்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் அனுப்புவதற்கும் தபால் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

editor

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது