அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் ?

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், 20.54 சதவீதமானோர் இம்முறை வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதாவது 3,520,438 பேர் வாக்களிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இம்முறை பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 17,140,354 என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினரானார் வஜிர அபேயவர்தன

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியது

editor

அநுரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு

editor