அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு  தயாராக இருந்தால் பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (17) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் இப்போது எங்களிடம் உள்ளது.

நற்செய்தி என்னவென்றால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

வேட்பாளரை முன்வைக்கும் போது, ​​அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது புரியும்.

நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்தோம்.

அடுத்து எமது அரசாங்கமே வரும். ஜனாதிபதி எங்களுடன் பயணிக்கத் தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழு ஆதரவளிப்போம்” என்றார்.

Related posts

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

editor

சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு | வீடியோ

editor

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – இம்ரான் எம்.பி

editor