சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட இறுதி நிகழ்வு இன்று(06)

(UTVNEWS | COLOMBO) – “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாளுக்கான நிகழ்வு இன்று06) பிபிலை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. 

குறித்த இன்றைய இறுதி நாள் நிகழ்வில் மாவட்டத்தின் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவாய தள வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக பிரிவு ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் இருவருக்கு கொரோனா வைரஸ் ?

நம்பிக்கையில்லா பிரேரணை; சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும்

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி