சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (13) நண்பகல் அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாராந்த அமைச்சரை கூட்டம் நேற்று (12) நடைபெற்றதுடன் அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் நேற்று எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அவசர அமைச்சரை கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலிக் சமரவிக்ரம, துமிந்த திஸாநாயக்க, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் கூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு