உள்நாடு

ஜனாதிபதி ஜப்பானுக்கு

(UTV | கொழும்பு) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.

அங்கு ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 217 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 அதிதிகள் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் பல உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related posts

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

‘ரட்டா’ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை