அரசியல்உள்நாடு

ஜனாதிபதி செய்கின்ற அனைத்தும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது – சஜித்

அநுர குமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜோடியாக இணைந்து அரசியல் திருமணம் செய்து கொண்டு இந்த நாட்களில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் தேனிலவு கொண்டாட்டம் 21 ஆம் திகதியோடு நிறைவடைகின்றது.

இந்த நாட்டு மக்களை வாழவைக்கின்ற பயணம் 21 ஆம் திகதியோடு ஆரம்பமாகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 66 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 17 ஆம் திகதி கேகாலையில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அநுர ரணில் டீல் செய்து கொண்டு தன்னை தோல்வியடைய செய்ய முயற்சிக்கின்றனர். தாம் இந்த நாட்டிற்கு சேவை செய்வேன் என்று அவர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புலமை பரிசில் பரீட்சையையேனும் இந்த அரசாங்கத்தால் முறையாக நடத்த முடியாமல் உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவினால் இயலும் என்று கூறப்பட்டாலும் அவரின் கீழ் உள்ள அரசாங்கத்தினால் புலமை பரிசில் பரீட்சையின் கேள்வி பத்திரம் வெளியாகாமல் பரீட்சை நடாத்த முடியாமல் போயுள்ளது.

தற்பொழுது அந்த மூன்று கேள்விகளையும் அகற்றுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பரீட்சைக்கு தோற்றிய இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கல்வி முறையில் உருவாகியுள்ள இந்த லீக் ஆகும். இந்த சூழ்ச்சியை கண்டறிந்து வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வரிச்சுமையை இல்லாது செய்வோம்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை நாம் பாதுகாப்போம். ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவோம்.

இந்த அரசாங்கம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் மீது வரிச்சுமையை அதிகரித்திருக்கின்றது. இந்த தொழில் முயற்சிகளை பாதுகாத்து இந்த அசாதாரண வரி சூத்திரத்தை மாற்றி உற்பத்தியாளர்களுக்கு பலத்தை பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளுக்கு தீயிட்டவர்களுக்கு தொழிற்சாலைகளை உருவாக்க முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தனியார் துறையில் சேவையாற்றுகின்ற சகோதர சகோதரிகளின் தொழிலை பாதுகாப்போம். தொழிற்சாலைகளை கொளுத்தியவர்களினால் தொழிற்சாலைகளை உருவாக்க முடியாது.

விவசாயிகளுக்கு பல சலுகைகள்.

விவசாயத்தில் ஈடுபடுகின்ற மக்கள காட்டு விலங்குகளின் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளனர். இந்த காட்டு விலங்குகளின் பிரச்சினைக்கு முறையான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்போம். அத்தோடு உரம் எரிபொருள் என்பனவற்றுக்கு நிவாரணங்களையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

காணி மற்றும் வீட்டுக் கனவை நனவாக்குவோம்.

தோட்டப்புறங்களில் வாழ்கின்ற மக்களுக்காகவும், தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காகவும், பயிரிடப்படாத தரிசு நிலங்களை வழங்கி சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம். வீடில்லாத மக்களுக்காக மீண்டும் ஒருமுறை வீடமைக்கின்ற யுகத்தை உருவாக்குவோம் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 21 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும்போது வெற்றி பெறுவது 220 இலட்சம் மக்கள் ஆகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு!

நிதியமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நோட்டீஸ்

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை