சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்ற முன்னிலையில்..

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று(24) சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது வழக்கான குறித்த வழக்கிற்கு காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், 61 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். வழக்குடன் தொடர்புடைய 92 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாவுக்கு எதிரான மனு; இறுதித் தீர்ப்பு நாளை

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உத்தரவு