சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வரும் சாரதி ஒருவரும் மற்றுமொரு நபரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்கவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9.20 கிராம் எடையுடைய போதைப்பொருள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் அரகங்கவில பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றுபவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இன்று(18) மனம்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.

 

 

 

 

 

 

Related posts

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு…

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம்