சூடான செய்திகள் 1

ஜனாதிபதி-சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல்…

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அதன்போது, வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் புறக்கணித்தனர்.

இருப்பினும் இன்றைய இந்த சந்திப்பை அடுத்து, அவ்வாறான தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து மட்டு