சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி; சிறைக் கைதிகளிடம் வாக்கு மூலம்

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்யப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ள, சிறைக் கைதிகள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

வெலிகடை மற்றும் அக்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 சிறைக்கைதிகளிடம் இவ்வாறு வாக்குமூலம் பெற தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மேற்படி சிறைச்சாலைகளின் பொறுப்பதிகாரிகளுக்கு நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

Related posts

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

இன்றைய வானிலை…

குற்றச்சாட்டை நிராகரிக்கும் அமைச்சர்