உள்நாடு

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் குவைத் பிரதமர் ஷெயிக் சபா அல் – ஹமாட் அல் – சபா (Sheikh Sabah Al-Hamad Al-Sabah) ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கின் மென்ஹெட்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் தொடர்பில் நினைவுகூரப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி இலங்கையர்கள் பலர் குவைத்தில் பணியாற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொழிற்பயிற்சிகளை பெற்றவர்களுக்காக மேலும் பல வாய்ப்புகளை வழங்குமாறு அந்நாட்டு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

”அஸ்ரப் அருங்காட்சியகம்:” அம்பாறை அரசாங்க அதிபருக்கு கிடைத்த கடிதம்

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை கூட மீறியுள்ளார் – சஜித்

editor

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்