(UTV|COLOMBO)-ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று விசேட உரையாற்றினார்.
ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்காகவே தாம் அதிகாரத்திற்கு வந்ததாகவும் கட்சி, நிறம், பதவி எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாகவும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கடந்த அரசாங்கத்தைப் போல் அல்லாது, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பாராளுமன்றில் அது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிதி நிர்வாக அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவே கோப் குழுவிற்கும் பாராளுமன்றத்திற்கும் பொறுப்பு வழங்கியதாக பிரதமர் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டினார்.
முறிகள் கொடுக்கல் வாங்கலினூடாக பாராளுமன்றத்தில் நிதி நிர்வாகப் பலம் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் ஒழுக்கத்துடன் செயற்படுகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்ட 9.2 பில்லியன் ரூபாவை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த மோசடியுடன் அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனது விசேட உரையில் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]