உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது. காப்புறுதி செய்யப்படாத 28 வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், ஒரு வாகனத்தின் பெறுமதி 25 முதல் 30 கோடி ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயர் காப்பீட்டு வாகனங்களின் அதிக மதிப்பு காரணமாக, காப்பீட்டுக்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபா வரி செலுத்த வேண்டும். எனவே குறித்த வாகனங்களை அதிக செலவுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதி செயலக கணக்கு அதிகாரி கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள சட்டங்களை பின்பற்றப்படாவிடின் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றுக் கொள்கை முடிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போலி வேலை வாய்ப்பு பணியகத்தினை சுற்றி வளைத்தது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா