ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 3ஆம் திகதி அரசு முறைப் பயணமாக வியட்நாமுக்கு பயணமாகவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மே 3ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு வியட்நாமுக்கு பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களைக் கொண்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி பதவியேற்று 3ஆவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.