அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – ஜீவன் தொண்டமான்

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த எதையும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட அணித் தலைவர் வேட்பாளருமான திரு. ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்றதாக ஊடக சந்திப்பில் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அரிசி, முட்டை, தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரிப்பினால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அதனைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பெருந்தோட்ட மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி எந்தக் கருத்தையும் வெளியிடாத நிலையில் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் எரிபொருளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் விலைக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கம் விலைக்கொள்கையின்படி செயற்படாததால், நாட்டில் மேலும் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் இந்தியாவில் அத்தகைய திட்டம் இல்லை என தெரித்தார்

Related posts

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை தாக்கியமைக்கு அரசை கடுமையாகும் சாடும் பொன்சேகா

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

editor

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்