அரசியல்உள்நாடு

ஜனாதிபதி மலையக மக்களை மறந்தது ஏன் ? ஜீவன் தொண்டமான்

நாட்டில் உள்ள மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கிய புதிய ஜனாதிபதி ஏன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இன்று (16) இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் 1350 ரூபா அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பனவு 350ரூபாவை அதிகரிக்குமாறு சம்பள நிர்ணய சபையில் நாங்கள் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை நிராகரித்தது தற்போதய ஜனாதிபதியுடைய கட்சியான தேசிய மக்கள் சக்தி .

விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கி நான் குரல் கொடுத்திருக்கின்றேன். எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 30 சுயாதின கட்சிகள் உருவாகியுள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால் முன்னாள் அமைச்சர் திகாம்பரம், நான், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன், உதயகுமார் போன்ற அநேகமான பெயர்கள் காணப்படும். ஆனால் தற்போது ரவீந்திரன் என்பவருடைய பெயரும் காணப்படும்.

அவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளர். அவர் யார் புரொடொப் தோட்டப்பகுதியில் முகாமையாளராக இருந்து மக்களை தாக்கி தொழிற்சாலையில் அடைத்து வைத்திருந்தவர். கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தான் சென்று அம்மக்களை விடுவித்தோம். அவர் போன்ற ஒருவருக்காக மலையகத்தில் சிலர் கொடியினை உயர்த்திக்கொண்டு ஆதரவு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

தனக்கு கிடைத்த வளங்களை வைத்து மாத்திரம் வேலைசெய்ய முடியுமே தவிர வளங்களை உருவாக்க முடியாது. நாடு வங்குரோத்து அடைந்தபோது கூட மலையகத்தை பொருத்தவரையில் இரண்டு சம்பள உயர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

ஆரம்பகாலம் முதல் நான் சொல்லி வருவது எம்மிடம் இருப்பது 10000 வீடுகள். ஆனால் 10000 வீடுகளை வைத்து ஆறு அரசியல்வாதிகள் ஒன்றரை இலட்சம் பேரை எமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்குகளுக்காக ஒரு தவறான வதந்திகளை பரப்பாது கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளும் இல்லாமல் போயுள்ளது.

நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை மக்கள் தூக்கி எறிந்து விட்டிர்கள். அதேபோல் எம்மையும் தூக்கிப் போடாமல் இருந்தால் சரி. இதற்கு பிறகு சம்பள உயர்வு எந்த அடிப்படையில் கிடைக்கும் என்பதை பற்றி எனக்குக் கூறமுடியாது.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உதவி ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொடுத்தோம். மலையக மக்களுடைய வாக்குகளை சிதறடிக்க முயற்சி செய்கின்றனர். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என கூறியவர்கள் களுத்துறை மாவட்டத்தில் தந்தையும் மகனும் போட்டியிடுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

Related posts

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

மேலும் இரு தினங்களுக்கு மழையுடனான வானிலை