அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

பிரஜைகளை வலுவூட்டுவதற்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் (DPI) நிறுவுவதன் மூலம் பல்துறை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.

அதன்படி, வேகமான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மற்றும் அனைத்து பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பாரம்பரிய அபிவிருத்தி வாய்ப்புகளை உள்வாங்கக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் நியமனம் மேலே குறிப்பிட்ட தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமானவரான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தற்போது ஆசியாடா நிறுவனத்தின் (Axiata Group Bhd) தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவதுடன், அவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நிறைவேற்று அல்லாத தலைவராக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக்கு தலைமை வகிப்பார். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான குறித்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த நியமனத்தின் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான நிறுவன கட்டமைப்பிற்குள் பல நிறைவேற்றுத் தலைமைப் பாத்திரங்களை அவர் வகிக்க உள்ளார்.

இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் விடயப்பரப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட நிறுவனமான டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் அவர் வகிப்பார்.

Related posts

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு

கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு எப்போது கிடைக்கும்?

பூனாகலை வனப்பகுதியில் தீ; 50 ஏக்கர் நிலம் பாதிப்பு