கிசு கிசு

ஜனாதிபதியை காக்கச் சென்ற பேரணிக்கு ‘புண்ணாக்கு’ தன்சல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவாக இன்று (ஏப்ரல் 11) அனுராதபுரத்தின் பல இடங்களில் பேரணிகளில் கலந்துகொள்வதற்காக வந்தோருக்கு புல் மற்றும் புண்ணாக்கு தன்சல்கள் தயார் செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரகோன் உள்ளிட்டோர் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

அநுராதபுரம் புதிய நகரிலுள்ள வங்கி பிளேஸில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பின்னர் மணிக்கூண்டு கோபுரத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

Related posts

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

‘பென்டோரா பேப்பர்ஸ்’ பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ

பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க பிரத்யேகமான காலணி