உள்நாடு

ஜனாதிபதியின் மீலாத் தின செய்தி

(UTV | கொழும்பு) – இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது அவர்கள் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மது நபியின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள், முஹம்மது நபிக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரணிலின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது – அகிலவிராஜ் காரியவசம்.

editor

சம்பள முரண்பாடு : தீர்மானம் நாளை

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று