உள்நாடு

‘ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒத்துபோகவில்லை”

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்த போதிலும், அரச பிரகடனத்தின் பின்னர் 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஏழு மாவட்டங்களுக்கு பாதுகாப்புப் படையினரை அழைக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாக்கீர் மார்க்கர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“… இது போலியான நடத்தை. அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது சர்வதேச ரீதியாக என்ன சொன்னார்? பயங்கரவாதச் சட்டத்தை நிராகரிப்போம் என்று சொன்னோம், ஆனால் இன்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கேவலமான முறையில் பயன்படுத்தப்படுகிறது.பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். இந்த நாட்டுக்கு என்ன நடக்கிறது? நாட்டு மக்களின் எரியும் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் மாணவர் தலைவர்கள், அரசாங்கத்திற்கு எதிரான சதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்..”

Related posts

கலைக்கப்படும் நாடாளுமன்றம்? ரணில் உடன்படுவாரா? SLPP தொடர் அழுத்தம்

பாலித்த எப்படி மரணித்தார்? அறிக்கை வெளியானது

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்