(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் என்பவரே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆணையாளராக மஹிந்த தேசப்பிரியவும் உறுப்பினர்களாக எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் மற்றும் என்.ஜே அபேசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.