வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதியின் அதிரடி முடிவு!!!

(UTV|COLOMBO)-லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிராலயத்தில் பணியாற்றிய, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகர் பிரிகேடியர் ப்ரியங்கர பெர்ணான்டோ மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அதபத்து  தெரிவித்தார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் அங்குள்ள  புலம்பெயர்ந்த தமிழர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் ப்ரயங்கர பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் செயற்பட்டுள்ளார்.

அவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்யும், காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில், அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

அத்துடன் குறித்த காணொளி தொடர்பில் தமது அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்

பிரதமர் கிந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம்

இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு