சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி கருத்து

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த உரைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் வழங்கியுள்ளார்.

“ஜனாதிபதி அவர்களே அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அனைத்து தீர்மானங்களும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வண்ணாத்திப்பூச்சி குழுவினாலேயே எடுக்கப்பட்டது என்று நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் நேற்று இடம்பெற்ற ´மக்கள் மகிமை´ எதிர்ப்பு கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார்.

 

 

Related posts

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

WHATSAPP மற்றும் FACEBOOK முடக்கம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…