வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதியினால் Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனம் வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து வில்லைகளை உற்பத்தி செய்யும் இலங்கையிலுள்ள பாரிய மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவன தலைவர் ஏ.நடராஜா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

Related posts

சுனாமி – சூறாவளி வதந்நிகளே – இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா வெளிநாடு செல்லத் தடை

விமானத்தை கைகளால் தள்ளும் ஊழியர்கள்