அரசியல்

ஜனாதிபதியினால் புதிய சட்டமா அதிபர் நியமனம்.

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) நியமித்துள்ளார்.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய  அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர்
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்கவின் புதல்வராவார்.

Related posts

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?

சபாநாயகரை சந்தித்தார் இலங்கைக்கான கியூபா தூதுவர்

editor