உள்நாடு

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று(25) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அவர் ஆற்றவுள்ள உரை சகல தொலைகாட்சி மற்றும் வானொலிகளில் ஒளி/ஒலி பரப்பப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை , உரப் பிரச்சினை, கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல விடயங்கள் தொடர்பில் பல தரப்பினராலும் அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கக் கூடிய நிலைமை இழக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையும் பேசுபொருளாதார அமைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இன்று முன்னாள் போராளிகளில் விடுதலையுடன் , துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பு இருவேறு கோணங்களில் ஜனாதிபதி மீது விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையிலேயே இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு