உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

(UTV | கொழும்பு) –    நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20.07.2023) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசை உள்ளிட்ட நாடு அராஜகமான நிலைமையில் காணப்பட்ட வேளையிலேயே அவர் நாட்டைப் பொறுப்பேற்றார்.

தற்போது நாடு இயல்பு நிலைக்கு வந்துள்ளதால் ஆண்டு நிறைவு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டுமென பலத்தரப்பினரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லங்கா சதொச மூலம் விநியோகம் – அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று