உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் ஜூலை நடுப்பகுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறாரா? அப்படியானால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எந்த வகையான நிபந்தனைகளுடன் இணைவார் என்பதன் அடிப்படையில் தனது கட்சியில் இருந்து வேட்பாளரை நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்னவினால் மட்டுமே வெளியிடப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கட்சியின் உள் அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் அவரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க வேண்டும் என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் உங்கள் இல்லங்களில் UTV 📺 WHATSAPP GROUP https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

Related posts

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

புதிய அரசே தற்போதைய தேவை – லக்‌ஷ்மன் கிரியெல்ல