சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1134 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1134 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4 மணிவரையிலான 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 100 முறைப்பாடுகள் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1087 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி; சிறைக் கைதிகளிடம் வாக்கு மூலம்

பாடசாலைகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு