சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(14) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்