வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக விளாடிமிர் புட்டின் தெரிவிப்பு

(UTV|RUSSIA)-அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புட்டின் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் 2018 மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று ஜனாதிபதியானால் வரும் 2024 ஆம் ஆண்டுவரை நீடிக்கும் புட்டினின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்தில் தாய் செய்த காரியம்…

மட்டகளப்பு ஏறாவூர் பற்று பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவுகள்

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!