உள்நாடு

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் – சந்தேகநபராக பெயரிடப்பட்ட ‘பொடி லெசி’

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபராக ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க பெயரிடப்பட்டுள்ளார்.

காலி பிரதான நீதவான் இன்று(17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீராக்கல் மனுவொன்றின் மூலம் மேற்கொண்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று