சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு

(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர் நேற்று(27) ஜனாதிபதியை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் ஜேர்கென் ஸ்டோக் (Jurgen Stock) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இன்டர்போலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்தமை தொடர்பில் இதன்போது பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவதற்காக வழங்கிய உதவிகளை பாராட்டினார்.
இலங்கை பொலிஸாரும் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் உயர்ந்த தொழில்வாண்மையுடன் செயற்படுவதாகவும் இன்டர்போல் நிபுணர்களுக்கு தேவையான முழுமையான உதவி அவர்களிடமிருந்து கிடைப்பதாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் நிதி தொடர்பான குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக உதவி வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது இன்டர்போல் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு முழுமையான உதவிகளை வழங்குவதாக பொதுச் செயலாளர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

போதைப்பொருட்களை கண்டறியும் புதிய தொழிநுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தேவையான விசேட அறிவை பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

பெலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை