உள்நாடு

ஜனாதிபதிக்கு அநுரகுமார திஸாநாயக்க கடிதம்

(UTVNEWS | கொழும்பு) –நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்றுய தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

ஊரடங்குச்சட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க முடியாத சூழ்நிலை அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும்  காணப்படுகின்றது.

எனவே இது குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து அடுத்து எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கலந்துரையாட விரும்புகின்றோம். பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்களோடு நாங்களும் உடன்படுகிறோம்.

முடியுமான அளவு விரைவாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை கூட்டி ஒரு இணக்கமான முடிவை எட்டுவதற்கு தாங்கள் முன்வர வேண்டும் இது குறித்தெல்லாம் உங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம்.என்று அநுரகுமார திசாநாயக்க அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

Related posts

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

editor

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை

மேலும் 176 பேர் பூரணமாக குணம்