கிசு கிசுசூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி-சர்வ மத தலைவர்கள்

(UTV|COLOMBO)-ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வ மதத் தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் மாநாடு அகில இலங்கை பெளத்த சம்மேளனத்தின் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஶ்ரீலங்கா அமரபுர மஹா நிகாயவின் மாநாயகர் கொட்டுகொட தமமாவாச தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

போதைப்பொருள் ஒழிப்புக்கு மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற விசேட கருமபீடம்

1000 பெண்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்! உடந்தையான காதலி…