உள்நாடு

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் – இருவர் கைது.

(UTV | கொழும்பு) –

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து பலவந்தமாக 15 இலட்சம் ரூபா கப்பம் பெற்றமை தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கிருலப்பனை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்படி, இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மற்றும் உதவி செய்த இரண்டு சந்தேக நபர்களே தம்புள்ளை பல்வெஹர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 மற்றும் 40 வயதுடையவர்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO]

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து – மூன்று பேர் காயம்.

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர் றிப்தி அலி!