உள்நாடு

ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் வெற்றிடமடைந்த ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) இடம்பெறவுள்ளது.

குறித்த விவாதம் இன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த விவாதம் நாளையும் நடைபெறவுள்ளது.

இதன்போது அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் உள்ள முன்மொழிவுகள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை

உயிர் பிரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் [VIDEO]

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்த வேண்டாம்