உலகம்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கினால் 40 பேர் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. இந்நிலையில் தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்தது.

இதில் ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆகிய ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு சோமாலியாவின் ஜூபாலாண்ட் மாநிலத்தில் உள்ள லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை அடைய அவசர மற்றும் மீட்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர்.

ஜூபா மற்றும் ஷபெல்லே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஜூபாவின் முழுப் பகுதியிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதுக்கு கொரோனா

உலகின் முதற்தடவையாக ட்ரோனைப் பயன்படுத்தி ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் துபாய்

editor

லொறியுடன் நேருக்குநேர் மோதிய வேன் – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி – 4 பேர் காயம்

editor