உள்நாடு

சொய்சபுர தாக்குதல் சம்பவம்; பிரதான சந்தேக நபர் உயிரிழப்பு

(UTV| கொழும்பு) – கல்கிஸ்ஸ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸார் கிடைத்த தகவலையடுத்து குறித்த நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸார் மீது சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

இதன்போது  இன்று அதிகாலை 12.03 மணி அளவில் பொலிஸார் மேற்கொண்ட எதிர் தாக்குதலில் சந்தேக நபர் காயமடைந்து திவுலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மெனிங் சந்தை இன்று மீண்டும் திறப்பு

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன

உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீயினால் உயிரை விட்ட தாய் மற்றும் பிள்ளைகள்