கேளிக்கை

சொப்பன சுந்தரிக்கு பதில் கிடைக்குமா?

(UTV|INDIA)  ராமராஜன், கனகா நடித்து கங்கை அமரன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கரகாட்டக்காரன். இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களுடன் படமும் ஹிட்டானது. அதில் நடித்த இரட்டையர்கள் கவுண்டமணி, செந்தில் காமெடி இன்றளவும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் மிகவும் பிரபலம். இப்படத்தின் 30ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

சமீபகாலமாக வெற்றி பெற்ற படங்களின் 2ம் பாகம் உருவாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கரகாட்டக்காரன் 2ம் பாகம் வருமா என்று கங்கை அமரனிடம் கேட்டபோது பார்ட் 2 வரும் என்றார். இதுகுறித்து படத்தின் கதாநாயகன் ராமராஜனிடம் கேட்டபோது பதில் அளித்திருக்கிறார்.

மேற்படி இவர்‘முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனி பெயர்கள்தான் உள்ளது. ஏன் பழனி 1, பழனி 2 என வைக்கவில்லை. அதுபோலத்தான் சில விஷயங்கள் பார்ட் 2 சரிவராது’ என சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார். சொப்பன சுந்தரிக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ராமராஜனின் இந்த பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

 

 

Related posts

பிரபல பாடகி காலமானார்

சூர்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி

புதிய கெட்-அப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்