சூடான செய்திகள் 1

சொந்த வாகனம் வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்

(UTV|COLOMBO)-வாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார்.

காலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவர் கைது