உள்நாடு

சொகுசு பேரூந்து விபத்து – 18 பேர் வைத்தியசாலையில்

(UTV|கொழும்பு)- வவுனியா ஓமந்தையில் இன்று(27) காலை இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மைத்திரி – ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு

மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிப்பு