உள்நாடுசூடான செய்திகள் 1

சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பல்வேறு காரணங்களினால் சேவையில் இருந்து விலகிய முப்படையினர்கள், அதில் மீண்டும் இணைவதற்கும் அல்லது சட்ட ரீதியாக விலகுவதற்குமான பொதுமன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

அதன்படி பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி இந்த பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பொது மன்னிப்பானது 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்யோகபூர்வமான விடுமுறையில் இல்லாமல் சேவையில் இருந்து இடை விலகிய முப்படையினருக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால், இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டியில் இரு பிரதேசங்கள் விடுவிப்பு

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

சமூக சேவையாளர் தாஸிமின் மறைவு குறித்து ரிஷாட் அனுதாபம்!!