சூடான செய்திகள் 1

சேனா கம்பளிப்பூச்சை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சேனா கம்பளிப்பூச்சால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பாட்டுள்ள பாதிப்பை மதிப்பிடும் நடவடிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் இடம்பெறும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ வீரகோண் தெரிவித்துள்ளார்.

இதற்காக விவசாய அதிகாரிகளுடனான குழுவொன்று பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அந்த மதிப்பீட்டுக்கு அமைய பயிர்ச்செய்கை பாதிப்பிற்கு இழப்பீடு அல்லது காப்புறுதியை வழங்க அரசாங்கத்தினால் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராதனை விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் கம்பளிப்பூச்சை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இணையத்தளமூடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழை வழங்க நடவடிக்கை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி