சூடான செய்திகள் 1வணிகம்

சேனா கம்பளிப்பூச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-சேனா கம்பளிப்பூச்சி யினால் பயிர்ச் சேதங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கென விவசாய அமைச்சு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படைப்புழு பீடையினால் நாச்சதூவ பிரதேசத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை அமைச்சர் பார்வையிட்டார்.இதன் போதே அமைச்சர் இந்த இழப்பீடு குறித்து அமைச்சர் தெரிவித்தார்.

வளவ்வ வலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளச் செய்கைக்கும் இந்த சேனா படைப்புழுவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதனங்கல, தோரகல, குட்டிகல ஆகிய பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

 

Related posts

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது