சூடான செய்திகள் 1

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு விரைவில்

(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 திகதி தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொட, ஹெட்டிப்பொல உள்ளிட்ட சில பிரதேசங்களில் சேதமடைந்த சொத்துக்களுக்காக நஷ்டஈடுகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முழுமையாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களின் போது சேதமடைந்த சொத்துக்களின் எண்ணிக்கை 820 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பத்துப் பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

இது தொடர்பில் முழுமையாக இழப்பீட்டை வழங்குவதற்கு முன்னர் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக முற்பணக் கொடுப்பனவைச் செலுத்துமாறு அரசாங்கம் இந்த அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந் நடவடிக்கை தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 0112 – 57 58 03 அல்லது 0112 57 58 13அல்லது 0112 – 57 58 26 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related posts

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் பிரதிபலன் மக்களுக்கே

கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு

தொழில்முனைவோருக்கான பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி