சூடான செய்திகள் 1

செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கும் அமைச்சர் மங்கள

(UTV|COLOMBO)-நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு தகவல் வழங்கிய செய்தியாளர்களை அச்சுறுத்தி இழிவுபடுத்தும் போக்கை தாம் வன்மையான முறையில் கண்டிப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தப் பத்திரிகைக்கு தகவல் வழங்கிய இலங்கை ஊடகவியலாளர் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த குழுக்கள் செய்தியாளர்களின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதனை ஊடக அமைச்சர் என்ற ரீதியில் தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

சமகால அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உச்ச அளவில் உறுதி செய்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தைப் போன்று ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் இல்லை, கொல்லப்படுபதும் இல்லை என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

எனது மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல்!

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது